சபலம்

பருவ மங்கை
பக்கத்தில் வந்தால்,
பாவி மனசு
படபடக்குதே!
சிவந்த சுந்தரி
சிரித்து நின்றால்,
சின்ன இதயம்
சிதைந்துப்போகுதே!
சேலை கட்டிய
சிங்காரி போனால்,
இதயத்துடிப்பு
இல்லாமல் போகுதே!
தப்பு,தப்பு
இந்த நினைப்பு
நாட்டில்
நான் ஒரு பெரியமனிதன்!
ஆனாலும்,
எங்கிருந்தோ ஒரு குரல்
ஒலிக்குது....
“அய்யா,பெரிய மனிதரே!
உம் அகத்தின் அழகு
உம் முகத்தில் தெரியுது.
துடைத்துக்கொள்ளும்.
சபலம்-சஞ்சலம்-சங்கடம்”

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (26-Mar-12, 11:26 am)
பார்வை : 427

மேலே