"உண்மைய சொல்லுடி"
![](https://eluthu.com/images/loading.gif)
உதாசின படுத்தாதடி
உண்மைய சொல்லுடி
உன்னுதட்டில்
உள்ளது என்னவோ....?
நீ வரும்போதெல்லாம்
உன் உதட்டை தேனிலே
குளிப்பாட்டி தான்
கூட்டி வருகிறாயா...?
கரும்பை கள்வாடி வந்து
கண் மறைக்க
சிவப்பு சாயம் பூசி
எடுத்து வருகிறாயா..?
வெல்ல கட்டிகளை
மெல்லஅள்ளி வந்து
மென்றுவிட்டு
கொள்ளி கட்டையில் பூசி
கொண்டு வருகிறாயா...?
என்னை கொன்று போட
இல்லை
தெரியாமல் தான் கேட்கிறேன்
இவ்வளவு சூடு எப்படியென்று...?
இலுப்பை பூவை எடுத்து
இதழ் மட்டும் கிள்ளி
சிவப்பு களிம்பு பூசி
இழுத்து வருகிறாயா.....?
இளிச்ச வாயனை
ஏமாற்றிவிடலாம் என்று;
இவ்வளவு கேட்டும்
என்னடி பேசாமல் இருக்கிறாய்...!?
சீக்கிரம் பதில் சொல்லடி....