"தீர்ப்பு"

எத்தனையோ பட்சிகளின்
எச்சங்களை சுமந்து சுமந்து
எண்ணற்ற ராகங்களை ரசித்து
சுரிரென சுட்டுவிடும்
சூரிய ஒளியில் குளித்திருந்தாய்;
அடைமழயில் அடிபட்ட‌
ஆடுமாடுகள் ஆதரவுக்காய் உனைநாட‌
விழுதுகளால் அணைத்து சுகம்தந்தாய்;

பழயகதையை பாசத்தோடு சொல்லும்
பாட்டியின் பருவகால தோழியாய்;
ஆதிகால திரைபடத்தில்
ஊராரை எதிர்த்து ஓடிவரும்
காதலர்களை காத்த காதல்தெய்வமாய்;
பகுத்தறிவு இல்லாத பாமரமக்களின்
பிராத்தனைகளை தாங்கி தாங்கி
பிராத்தனைகளின் கருவறையாகிவிட்டாய்;
விழுதுகளில் ஏறி
விளையாடிய காரணத்தால்
விரல்பிடித்து நடக்க வைத்து
விருட்ச தாயாகிவிட்டாய்;

எழுத்தறிவு இல்லாத மக்களை
ஏமாற்றி ஏவலிட்டு பிழைத்த
எத்தனையோ நாட்டாமைகளின்
எச்சில் துப்பிய சொம்புகளை
எட்டிபார்த்த கனவுகள்;
எக்கு தப்பாய் போன தீர்ப்புகள்;
இத்தனைக்கும் சாட்சியாய்
இன்றுவரை நின்றாய்;

நீதிமன்ற தீர்ப்பால்
அரிவாளுக்கு ஆகாரமாய்
அருபட்டு அனாதயாய்
விழுந்துவிட்டாய்.......

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (26-Mar-12, 5:56 pm)
சேர்த்தது : ஆரோ
பார்வை : 158

மேலே