விடுதலை தேசத்தின் விடுதலை காதல்
செய்திதாளின் - தினம்
ஒரு கலைஞன் - தினம்
ஒரு விஞ்ஞானி - பிறப்பான்
என்று பார்த்தால் - தினம்
ஒரு கள்ளக்காதலன் பிறக்கிறான்
நாளொரு மேனியும் , பொழுதொரு வண்ணமாக !
ஆண்கள் ஒழுக்க நெறியிலிருந்து
தவறுகிறார்கள் என்றால் , இங்கே
பெண்மையும் தவறுகின்றது
என்றுதானே பொருள் !
பெண்ணுக்கு மட்டும் கற்பை
வலியுறுத்துவது சற்றும்
நாணமில்லாத வார்த்தை அல்லவா !
வீட்டை பற்றிய நெருப்பு - அதன்
நல்ல கூரையையும் பற்றி
அளிக்காமல் விடுமா ?
ஆண்களின் அன்பை வேண்டித்தானே
பெண்கள் தங்கள் கற்ப்பு நிலையிலிருந்து
தவறு செய்கிறார்கள் ,
உண்மை நிலையை மறந்துவிட்டு
கற்பு என்று இருசாரார் நிலையையும்
பொருள் படக் கூறினாரே அன்று பாரதி
படிப்பில் மட்டும்தானா , வெளியே வேசமா ?
ஐரோப்பாவின் விடுதலைக் காதல்
என்னும் கொள்கை மிக வேகமாக
பரவி வருகிறது . அங்குள்ள
பெண்கள் எல்லாம் தாம் விரும்பியபடி
தாம் விரும்பிய ஆடவரோடு
சேர்ந்து வாழ்ந்து விடலாம் .
மிருகங்கள் ஒன்று கலத்தல் போல
ஆசை வந்தால் ஒருவரோடு சேர்ந்து
பின்பு எவ்வித வேதனையும் இன்றி
வேறொருவரை சேர்வார்களாம்
இப்படிப்பட்ட பொய்மையான்
காதலுக்கு விடுதலைக் காதலாம் .
நம்தேச கள்ளக்காதல் போல
ஆண்கள் எல்லோரும்
கள்ளத் தனமாக பெண்ணின்
இன்பத்தை பெற விரும்புகிறார்கள் !
ஆனால் அவர்கள் கற்பே மேலென்று
நெஞ்சில் கொஞ்சமும் ஈரமின்றி
பெண்களுக்கு உபதேசம் செய்கின்றனர்
என்று திருந்தும்
விடுதலை தேசத்தின்
விடுதலை காதல் (கள்ளக்காதல்)
என்றும் அன்புடன் "நட்புக்காக"