பிரிவோம் சந்திப்போம்
என் இதயம் கனப்பதென்னவோ
நினைவுகளில் மிதப்பதென்னவோ
நீ யாரோ, நான் யாரோ என்றிருந்தேன்
எனக்கென யார் என்று தவித்திருந்தேன்
சிறு புன்னகையால் என்னை நட்பாக்கினாய்
நாட்கள் நகர்ந்து வர என் உயிராகினாய்
விரோதி என்று யார் இங்கு ?
என் மன அகராதி உன்னிடம் இருக்கும் பொழுது !
கல்லூரி நாட்கள் அவை என் இதய
கல் வெட்டில் பதிக்க பட்டவை ..
எங்கிருந்தால் என்ன ???
என் நெஞ்சறையில் உன் நட்பை
வைத்திருப்பேன் கல்லறை அது வந்தாலும் கூட !!!