ரசனை குருடர்களாய்
நிலவும் நதியும் அழகு தான்.,
அஸ்தம சூரியனும் அல்லி மலரும் அழகு தான் ... தென்றல் காற்றும் அதில் அசையும் தென்னங்கீற்றும் அழகு தான்...
கடற்கரை மணலும் அதை தொடும் கடல் அலையும் அழகு தான்...
மழை நேர வானவில்லும் அந்த நேர சிறு தூறலும் அழகு தான் ...
கிழக்கில் வெளுக்கும் சூரியனும் அதை கண்டு துயில் கலைந்து தலை தூக்கும் சூரிய காந்தியும் அழகு தான் ...
குளிர்ந்து கிடக்கும் குளத்து நீரும் அதில் மிதக்கும் தாமரையும் அழகு தான் ...
சிதறி கிடக்கும் சர்க்கரையும் அதை பொருக்கி கொண்டு சீராய் செல்லும் சிற்றெரும்பு சாரைகளும் அழகு தான்...
வாசல் தெளித்து இடப்பட்ட கோலமும் அங்கே சிறகடிக்கும் சிட்டு குருவிகளும் அழகு தான் ...
மலர்ந்து நிற்கும் பூக்களும் அதை வட்டமிடும் வண்ணத்து பூசிகளும் அழகு தான் ...
கொட்டி கிடக்கும் நெல் மணிகளும் கொத்தி தின்னும் கொஞ்சும் புறாக்களும் அழகு தான்...
இத்தனை அழகும் .,
நம்மை சூழ்ந்து கிடக்க ..,
பொய்யான அழகை தேடி ஏனோ அலைகிறோம் .... கண்களிரண்டும் இருந்தும் ??
" ரசனை குருடர்களாய் ".....