நட்பில் காதல்

உழவனின் மேகங்கள்,
மழை வேண்டுதல்போல்
உன் வரவினை எதிர்நோக்கியவளல்ல.

ஆனாலும் நம் உள்ள இணைப்பு
இணைந்து நடந்தேறியது.

தாமரை இலையில்,
ஆடிநிற்கும் நீர்த்துளிபோல்
வாடிக்கிடக்கவில்லை நாம்

ஆனாலும் பாடித்திரிகின்றோம்,
காதலின் இனிய ராகங்களை.

துணைக்குவரத் தென்றலில்லை,
தூது செல்ல கிளியுமில்லை,
துடித்துக்கிடக்க இளமையுமில்லை,

ஆனாலும் விதைத்துக் கிடக்கும்
இன்பம் விளைய இங்கு நிலமுண்டு.

எழுதியவர் : nilaa (29-Mar-12, 1:04 pm)
பார்வை : 225

மேலே