வறுமையில் ஓர் கடிதம்

அவரவருக்கான அரிசியில்
அவரவர் பெயரிருக்கும்
உண்மையாகவா எந்த கடையில் தேடுவது

பசிக்கிறது
வாய் இருந்தும் ஊமையாய் அழுகிறேன்
வார்த்தை இல்லாத குழந்தையின் சத்தத்தோடு

அடமானம் வைப்பதற்கு
தலை மட்டுமே இருக்கிறது
வாங்குவோர் இல்லை

வாங்கினாலும்
தாய்க்கு மகனை தெரியாது
மகனுக்கு தந்தையை தெரியாது

இப்போது மட்டும் என்ன
வரும்போது போகும்போதும்
தலையேய் மறைத்து கொண்டுதானே

முதல்முறை கையேந்த
முகம்சுழித்து கூச்சபட்டேன்
வயறு வசத்தால் வாய் திறந்தேன் கையோடு

எனக்கான உணவு
இன்று இல்லையோ கடவுளே
இதுபோலதான் நேற்றும் கேட்டேன்

வறுமையின் நிறம் என்ன
சிவப்பு என்கிறார்கள்
பசியில் கண்கள் இருட் டிதானே போகிறது .

எழுதியவர் : jagadeeshwaran (29-Mar-12, 6:42 pm)
பார்வை : 229

மேலே