தனி ஒருவனுக்கு உணவில்லை...
திருவிழாக்காலம் வண்ணமிகு கோலம்
ஊர் கூடி விருந்துண்டார் ...வண்ணமிகு
பகட்டு பளபளக்கும் அணிகலன்கள்
பார்ட்டியும் பல ரகம் கும்மாளம் பலவிதம்..
அங்கோர் ஆநிறை சிறுவன் அழுக்கான ஆடை
உண்டதோ சிலநாள் உடுத்தியே பல நாள்
கண்டுகொள்வார் யாருமில்லை பசியோ பசி
வேதனையில் விழுந்தான் பட்டிமன்றம் முன்பு...
நடந்தது பட்டி மன்றம் தலைப்போ
பாரதியின் தனி ஒருவர்க்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழிப்போம்...