சம்பிரதாயம்...!!!
ஒருவர்
ஒரு புதிய பொருளை உருவாக்கிட
பல வருடங்களையும்
பல லட்சங்களையும்
செலவு செய்தார்
அப்பொருளை விற்றிடவும்
பல லட்சம்
செலவு செய்தார் .....
ஆனால் ,
விற்ற பிறகு
ஒரு பைசா கூட
கைக்கு வரவில்லை
புதிதாக திருமணமான
பெண்ணின் தந்தைக்கு....!!!