விளக்கேத்த வந்தவள்

நான்
வாழும்காடு
மிகப்பெரியது.
பெரிதென்றால் இவ்வுலகின்
அளவிற்க்கு!

இங்கு
சப்தங்களும் உண்டு!
நிசப்தங்களும் உண்டு!
இருளும் உண்டு!
ஒளியும் உண்டு!
பசுமைக்கு
பஞ்சங்களும் உண்டு!

இருளடைந்த
இக்காட்டினிலே - நான் போடும்
திட்டங்களே
சட்ட்ங்களாகும்.

நான் பேசும்
பேச்சுகளே எட்டு
திக்கெங்கும் பாடும்
தேவகானம்!

கார் முகிலுங்காணாத
இக்காட்டினிலே
பார்புரியும்
அரசன் நான்!

மனிதரில்லா
என் தனிமை காட்டில்
விளக்கேத்த வந்த
என் நிலவுச்
சூரியன் நீயடி!

தனிமை போக்கி
என் வாழ்வை
இனிமையாக்கிட
வந்தாயே!

நீ வந்தபின்
என் தனிமை காடும்
சொர்க்கம்
தானடி!

எழுதியவர் : ராஜேஸ்குமார் (5-Apr-12, 1:53 pm)
பார்வை : 580

மேலே