ஒரு காதல் தோல்வி
சேற்றில் படிந்த கால்தடம் போல
என் நெஞ்சில் உன் நினைவு தடங்கள்
என்றும் அழியாமல்.
***
மண்ணாங்கட்டியாய் என்
காதல் கூற்றுகள்
காய்ந்தவுடன் தூள தூளாய்.
***
சாக்கடை நீராய் என் கண்ணீர்
சற்றும் மதிக்கப் படாமல்
அருவி போல், ஊற்றாய்.
***
இதயம் நின்றுபோகும் நேரமெல்லாம்
இதயத்துடிப்பாய் வரும் உன்
குறுஞ்செய்திகள் – உயிர்ப்பிக்க.
***
சற்றே நினைத்து பாரேன் – திருமணத்திற்குபின்
எங்கோ ஓர் அடிமை என்கிறாய்.
என்னுடன் இரேன் அடிமையாயோ என்னவோ
***
திருமணம் முடிந்த பின்னர்
திரும்பியும் பார்க்க நேரமிராது
நட்பு எங்கிருந்து???
***
கண்டோம்... விழித்தோம்... வியந்தோம்...
நிலாவை ஒன்றாய் ரசித்தோம்.
பேசினோம், முற்றுப்புள்ளியே இன்றி.
திறமைகளை பாராட்டினோம்.
கொஞ்சினோம்.. கெஞ்சினோம்..
‘பிரிவே! வராதே’, என்றோம்.
இறந்தோம்.
***
என்றேனும் அவன்
“அவனிடம் பேசாதே”
என்று கூருவானாயின்
“அவன் தியாகம் தான் நாம்”
என்று மட்டும் கூறிடுவாயோ???