கருவிழி அறுவை சிகிட்சை
அன்புள்ள ராமசந்திரன், பொள்ளாச்சி அபி,
நேற்று உடல் தானம், கண் தானம் என்ற ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். உடல்தானம், கண் தானம் செய்ய வேண்டும் என்ற உணர்வு உறவினருக்கு இருந்தால் போதும். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி, கண் மருத்துவ மனைக்குத் தெரிவித்தால் போதும்.
1.உயிரோடிருப்போரின் கண்களைத் தானம் செய்ய முடியாது.
2.கண்தானம் என்பது முழு கண்ணையே (Eyeball) எடுப்பது. அதில் பயன்படுவது cornea என்பது மட்டுமே.
3.கருவிழி (Cornea) பாதிப்பிருந்து, கண்ணின் மற்ற பகுதி - vitreous, retina and optic nerve - நன்றாக இருந்தால் மட்டுமே கருவிழி அறுவை சிகிட்சை (Corneal transplantation) செய்து பார்வை பெற முடியும்.
4.தானம் பெறப்பட்ட கண்ணின் Cornea நன்றாக இருந்தால் மட்டுமே பயன்படும்.
கிட்டப் பார்வைக் குறைபாடாகிய Myopia என்ற பாதிப்பை - அதன் அளவைப் பொறுத்து - கண்ணாடி, Radial keratatomy, LASIK என்ற சிகிட்சை மூலம் சரி செய்யலாம். தானம் பெற்ற கண்ணின் வெளிச்சவ்வு Sclera என்ற பகுதியை பயன்படுத்தி High Myopia - 20 D என்ற அளவில் உள்ள கிட்டப் பார்வைக் குறைபாடுக்கு Posterior scleral support என்ற அறுவை சிகிட்சையை மதுரையில் Dr.பாஸ்கரராஜன் செய்து வருகிறார்.