மனிதமாய் மிருகமாய்

இறந்தவனை பார்த்து
இருப்பவன் பேசுகிறான்
அவன் நல்ல மனிதனென்று ,
அப்பொழுது
இவன் யார் !

முன்னோர் போதனைகளை
வேதனையுடன் கற்கிறான்
இருந்தும் பயனில்லை ,
அவைகள் அனுபவத்தில்
கைவிடப்பட்டது !

ஆயிரம் எடுத்துக்காட்டுகளை
அடுக்கடுக்காய் சொல்கிறான்
ஆயினும் இவன் சாதித்தது
ஒன்றுமில்லை ,
நீதியை போதிப்பவனுக்கு ,
அநீதி எண்ணங்கள் ஆயிரம் ஆயிரம் !

குறை சொல்லி பழகியவன்
தன் குறையை
மறந்துவிட்டான் , மறுத்துவிட்டான்
ஊரார் அழுக்கை எடுக்கும் முன்
இவன் முதுகையும் கொஞ்சம் பார்க்கட்டும் !

ஊரை ஏமாற்றி வளந்தவன்
ஓராயிரம் பொய்சொல்லி ,
அரசியல் தேடி போவான்
அங்கே தன்னையும்
ஒரு தலைவன் என்பான் !

பெற்றவளை
பிச்சை எடுக்கவைத்தன்
பிள்ளைகளை கொத்தடிமைகளாக ஆகினான்
பாலில் நீரை ஊற்றினான் ,
நிலத்தில் நஞ்சை விதைத்தான் !

எலியை இறைசியக்கினான்
பட்டினியை
வாழ்க்கை துனையக்கினான்
இங்கே மனிதன்
மிருகமாகிறான் !

மிருகம் தானே
இறைச்சியை வேட்டையாடும் ,
அங்கே அதையும் தாண்டி
தொல்லையே இல்லாத ஆயிரம் ஆயிரம்
கோழையாய்
கொன்று குவிக்கிறான்
கறிக்கடை வாசல்களில் !

பொதுநல போராளிகள்
போய்விட்டார் மண்ணுக்கடியில் ,
சுயநல போராளிகளே
மிச்சமிருப்பது ,
உடமை துறந்தார் ,
உலகை துறந்தார் ,
உயிரை துறந்தார் ,
என்பதெல்லாம் போய்
இன்று ,
சுயநலம் ஆண்டுகொண்டிருக்கிறது
நம் நாட்டில் ஆட்சியாய்!

தேடினேன் தேடினேன்
கண்டு கொண்டேன்
மிருகங்களை எளிதில் ,
ஆனால்
இன்றுவரை கிடைக்கவில்லை
ஒரே ஒரு மனிதன் கூட !

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Apr-12, 4:06 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 194

மேலே