புறப்படு தோழா புழுதி பறக்க...!
புறப்படு தோழா புழுதி பறக்க...
எழுந்திரி தோழா இளமை துடிக்க...
பாரத நாட்டை காத்திடவே
இனி ஒரு விடியல் செய்திடுவோம்..!
அடிமை பட்டு கிடந்தபோது
விடியலுக்காக காத்திருந்தோம்...
தியாக தீபங்களின் வெளிச்சத்தால்
விடியல் கிடைத்தது அன்று...!
விடியலின் வெளிச்சத்தை
விழி திறந்து பார்க்கவே
அரை நூற்றாண்டுகளை- நாம்
காவு கொடுத்துவிட்டோம்!
எழுந்திரு தோழா - மீண்டும்
நமக்கு ஒரு விடியல் தேவை
லஞ்சமும்... ஊழலும்...
கண்கள் ஆனது பலருக்கு...!
இயற்கைகூட இப்படி அழிக்காது
நம் இந்திய தேசத்தை!
பாரதத்திற்கு பலர் செய்த
தியாகங்கள் இன்று பாழாகிறது...!
அட்ச.. தீர்க்க ரேகைகளை
ஆராய்ந்து பார்க்க நேரம் இல்லை
இனி வரும் காலங்களை
இளைஞர்களுக்கு சாதகமாக்குவோம்..!
நம் நாட்டின் நரம்புகளுக்கு
புது ரத்தம் பாய்ச்சவும்
புத்துயிர் அளிக்கவும்
நம்மால் மட்டுமே முடியும்....!!!