வெற்றி இருக்கு...!

வெற்றி இருக்கு...
வெற்றி இருக்கு
முயற்சி செய்து பார்
வெற்றி உனக்கு...!

தோழா உனக்கு
தோல்வி எதுக்கு
முட்டி மோதிபார்
உலகம் சிறுசு...!

காகிதத்தில் கப்பல் விடும்
காலம் தான் கடந்துடுச்சி
கற்பனையை நேரில் காணும்
நேரம் தான் வந்திடுச்சு...!

முடிந்தவரை முயற்சி செய்து
தெரிந்தவரை தேடி பார்த்தால்
தோல்விகள் தொல்லை இல்லை
வெற்றிதான் உந்தன் எல்லை...!

வியர்வை துளிகள் சிந்திப்பாரு
வேதனையில் புரண்டுப்பாரு
வாலிபத்தின் துன்பம் கூட
கடந்து சென்றால் இன்பம் தான்டா...!

தோற்றமும் இல்லை
மறைவும் இல்லை
ஆனாலும், வீசும் காற்று
நின்று விடாது...!

முயற்சியை கையில் எடுத்து
நம்பிக்கையை நெஞ்சில் நிறுத்து
காற்றைப்போல் வாழும்
உன் பெயர் காலமெல்லாமே...!!!

எழுதியவர் : கதிர்மாயா (7-Apr-12, 10:43 am)
பார்வை : 301

மேலே