தொலையாமல் இருப்பது
என் மௌனத்தை தொலைத்தேன் , நான் பிறந்தபோது ..
என் தன்னம்பிகையை தொலைத்தேன் நான் தோல்வியுற்றபோது ...
என் தூக்கத்தை தொலைத்தேன் நான் படிகின்றபோது ...
என் தனிமையை தொலைத்தேன் நட்போடு பழகியபோது ....
என் இதயத்தை தொலைத்தேன் உன்னை முதல் முறையாக பார்த்தபோது ....
இப்பொழுது தொலையாமல் இருப்பது இந்த நொடியும் , உன் நினைவுகளும் மட்டுமே .........