ரதி பிரபாவின் அழகிய கவிதை ---கருத்து---கவின் சாரலன்
அருமையான கவிதை தித்திக்கும் முத்த முதலிரவு. .விரசம் இல்லாமல்
முதல் இரவை கவிதையில் சொல்வது
கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பாகும்
நிலவின் துணைகொண்டு முகம்
சுளிக்காமல் முறுவலித்துப் படிக்க
கூடிய முதலிரவு கவிதைச் சித்திரம்.
இல்லற இலக்கியத்தின் அந்தரங்கமான பக்கம் தாம்பத்தியம்
அதன் ஆரம்பம் முதலிரவு
"ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலிரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதலுறவு" -----வாலி
"முதலிரவென்பது ஏனடி வந்தது ராதா ..
அது முறைமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா "
---------கண்ணதாசன்
பரிசிற்குரிய கவிதை. நாட்டுத் தலைவர்களைப் பற்றியும் சமூக அவலங்களைப் பற்றியும் நட்பு தாய் பற்றிய உணர்வுகளைப் பற்றியும்
எழுதப்படும் கவிதைகளைத்தான்
பரிசுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்
என்ற போலியான பழமையான
பழக்கத்தை மாற்றி எதைப் பற்றி
எழுதினாலும் எப்படி கவிதை எழுதப்
பட்டிருக்கிறது என்பதை ஓர்ந்து
கவிதைகள் தேர்ந்தெடுக்கப் படுமானால்
தரமிக்க நற் கவித்தைகள் தமிழில்
வளரும் வாழும்
"There are no good books or bad books
There are only well written
books and badly written books "
----Oscar Wilde
என்ன நான் சொல்வது சரிதானே ரதி
நற் கவிஞை தந்த நற் கவிதை வாழ்த்துக்கள் தாரகை 5 ++++
---அன்புடன் ,கவின் சாரலன்
கவிக் குறிப்பு:ரதி பிரபா எழுதியிருக்கும் அழகிய
கவிதை "முத்த முதலிரவு " கவிதையை படித்த
போது தோன்றிய கருத்து நீங்களும் சொடுக்கிப்
பாருங்கள் நான் சொல்வதின் நியாயம் புரியும்
கவி பிற்குறிப்பு :இக்கவிதை பால் மணம் மாறா
பாலகற்கு இல்லை பூ மணம் கொண்டு வாழ்வில்
இல்லறம் இயற்றுவோற்கு மட்டும்