இனத்தின் சாட்சி!
ஒளிவீசும் கதிரவனை காலையில் பார்க்க கண்கள் கூசும், அனால் எனக்கோ எங்களுக்கு அநீதி இளைத்த மனிதர்களை பார்க்க கண்கள் கூசுகிறது. இன்னும் எங்கள் வாழ்வில் இருள் சூழ்ந்து கொண்டு இருக்கிறதே என்று நெஞ்சம் குமருகிறது. போர் முடிந்து இரண்டு வருடங்கலாகியும் இன்னும் நான் போர்கள குற்றவாளி போல தான் நடத்தபடுகிறேன். என் இனமே அழிந்து விட்டது இன்னும் இந்த உயிர் மட்டும் எதற்கு? எழுந்தவுடன் எனது அம்மாவை கட்டிபிடிக்க புடிக்கும், எங்கே தேடுவேன் எனது தாயின் அரவணைப்பையும் பாசத்தையும் இந்த இரத்த பூமியில், கூப்பிடும் தூரத்தில் இல்லை அவள்... கண்களில் கண்ணீர் வார்த்தபடி நான் ஏக்கத்துடன் அவள் கடைசியாக என் கன்னத்தில் முத்தமிட்டு நெகிழ்ந்ததை நினைத்து கொண்டேன்.
என்னுடன் இருந்தவர்கள் எல்லாரும் எனக்கு காணகனவாக இருக்கிறார்கள், அவர்களின் நினைவாக நான் மட்டும் இருக்கிறேன். குயில்களின் ஓசையைவிட உயிர்களை காவு வாங்கும் குண்டின் சத்தமும் துப்பாக்கி தோட்டாக்களின் சத்தமமும் அதிகம் கேட்டேன். யாராவது எங்களுக்கு உதவ மாட்டர்களா என்று நாங்கள் இறைவனிடத்தில் தொழாத நாட்கள் இல்லை... எனது இனத்தின் உறவுகள் அண்டை நாட்டில் இருந்தும் எந்த பலனும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது, எனது உறவுகள் எல்லாரும் போரினால் கொல்லப்பட்டனர்.. நான் மாட்டும் ஏன் உயிர் பிழைத்தேன்? இனி நான் மட்டும் ஏன் உயிரோடு இறுக்க வேண்டும் என்று நினைத்தேன்... எனது இனம் என்னை சாட்சியாக விட்டு சென்றுள்ளது.. ஆம் நான் உயிரோடு இருந்தால் தான் என் கண்முன்னே நடந்த அணைத்து அக்ரமங்களும்,கொலை குற்றங்களும், பாலியல் வல்லுருகள், கொடூர செயல்கள் அனைத்துக்கும் சாட்சியாக என்றாவது சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பேன்! இந்த உலகத்தின் கடைசி நாள் வரை நீதி சாகாது!
போர் என்ற போர்வையில் எனது இனத்தின் அப்பாவி உயிர்களை காவு வாங்கிய இரத்த வெறி பிடித்த கொடூர மனிதர்களை நீதியின் முன்னால் நிறுத்தாமல் எனது உயிர் இளைபாராது.... இன்றைய நாளாவது நீதிக்கு வழிவுகுக்கும் நேரம் வரும் என்ற நம்பிக்கையில் படுக்கையை விட்டு மனஉறுதியுடன் எழுகிறேன் நொண்டி கால்லுடன்.........
இலங்கையில் வாடும் எனது இனத்தின் உடன் பிறப்புகளுக்கு இதை சமர்பிக்கிறேன்....