காத்திருக்கும் காதல்

பரபரப்பான காலை சுறுசுறுப்பான தோழர்கள்
கலகலப்பாக நேரம் மெதுவாக நகர்ந்தது
கேலிகளும் கிண்டல்களும் லூட்டிகளும் தொடர்ந்தன
குதூகலத்துடன் வகுப்பு முடியும் வரலானது.

வகுப்பின் இறுதித்தருணம் சிணுங்கியது கைப்பேசி
சட்டென அழைப்பேற்று வைத்தேன் காதோரமாக
அழைத்தது அம்மாவின் அன்பு கைப்பேசியில்-ஆனால்
விரைவாக வீடுசெல்ல கட்டளை அழைப்பு.

கண்களில் பற்றிக்கொண்ட காதல்தீயில் இளைப்பாறினேன்
கண்களின் மோதலை தீர்த்துவைக்க எவருமிலர்
வகுப்புதனே முடியப்போகிறது ஏனிந்த ஏக்கம் அன்பே!
நாளைப பர்க்கலாமென்று விடைபெற்றேன் அவனிடமிருந்து.

ஏனிந்த குழப்பம் உள்மனதில்வலி எதனால்
மனதின் பாரத்தினை கண்களில் உணர்ந்தேன்
வலியா சுகமா குழப்பத்துடன் நடந்தேன்
வீட்டுவாசலில் கோலம் குழப்பத்தில் நான்.


பரபரப்பான அப்பா சிரிதுவிட்டுசென்றார் எனைப்பார்த்து
ஏனிந்த அமைதி அம்மாவைத்தேடி உள்ளே சென்றேன்
புடவைகட்டிவா மகளே என்றாள் அன்பாக – என்தங்கை
எனைப்பார்த்து சிரித்து வெட்கத்தில் சென்றாள்.

என்ன நடக்குமென்று தெரியவில்லை இக்கணம்
குழப்பம் மனதிலா இல்லை என் வாழ்விலா?
எனைநானே கேட்டுக்கொண்டேன் பலமுறை எனக்குள்
அம்மாவின் அவசரத்தால் உடனே தயாராயினேன்.

சேலையை கட்டிக்கொண்டு கைப்பேசியில் அழைத்தேன்
புடவையில் எனைப்பார்க்க ஆசையில்லையா!
வந்தால் எனைப்பார்க்கலாம் வருவாயா என்றேன்
கண்களில் கசிந்த காதலை அடக்கிக்கொண்டு..


அம்மாவின்குரல் அவசரப்படுத்த அறையைவிட்டு வெளியேறினேன்
எந்தகோயில்லுக்கு என்றேன் அம்மாவிடம் அவளோ சிரித்தாள்
அழைத்துச்சென்று பூச்சூடி நெற்றியில் முத்தமிட்டாள்
உனைப் பெண்பார்க்க வருகிறார்கள் என்செல்லமே என்றாள்.


நெற்றி முத்தத்தில் திளைத்த எனக்கு பேரிடிவிழுந்தது
என்வென்று கேட்கவியலாது கண்கள் சிவந்தேன்
ஏனிந்த அவசரம் என்றேன் அம்மாவிடம் அன்பாக
காலம் கனிந்ததென்று கிள்ளிச்சென்றாள் செல்லமாக


ஏன் சோதிக்கிறாய் என்று கடவுளை கோபித்துக்கொண்டேன்
வற்றாத கங்கையை என்கண்களில் உணர்ந்தேன் – ஆனால்
நமைவிட்டு பிரிய மனமின்றி குழந்தை அழுகின்றது
சமாதானம்செய்து அழைத்துவா என்றார் அப்பா அம்மாவிடம்.


ஒருபுறம் எனக்காக காத்திருக்கும் காதலன்- மறுபுறம்
எனக்காக வாழ்வில் உழைத்த பெற்றோர் – தாங்காத
துக்கத்தில் கட்டிலில் சாய்ந்தேன் கைப்பேசி கண்சிமிட்ட
வரவா என்றான் காதலன் குறும்புடன் குறுஞ்செய்தியில்.


ஒருவேளை வருவது அவனாக இருக்குமோ – நப்பாசை
மனதை கல்லாக்கி அறையைவிட்டு வெளியேறினேன்
கையில் தட்டினைக்கொடுத்து தோளை தட்டிக்கொடுத்து
தேநீர் கொடுத்துவா மகளே என்றால் அம்மா.
ஒவ்வொரு அடியும் வந்தவன் காதலன் என்று நம்பினேன்
மனதின் நடுக்கம் என்கைகளிலும் தெரிந்தது – எனக்கோ
பயத்தில் உறைந்த மனதுடன் தொண்டையும் அடைத்தது
சுற்றிலும் கூட்டம் தலைநிமிர்ந்து பார்க்க சொன்னது.

வந்தவன் காதலனல்ல காதலிக்க வந்தவன் – ஏமாற்றம்!
தேநீர்கொடுத்து அம்மாவின் அருகில் நின்றுகொண்டேன்
பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்கா! – கூட்டத்திலிருந்து
கிழவியின் பேச்சால் ரத்தம் கொதித்தது எனக்குள்ளே.


சம்மதமாவென்று பெண்ணை கேட்டு சொல்லுங்கள் என்றனர்
அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் வெளியே அப்பாவிடம்
பொண்ணு குடுத்து வச்சவ ! மறுபடியும் அதேகுரல்
கிழவியின் பேச்சால் எரிச்சலடைந்தேன் நான்.


என்னிடம் எதுவும் கேட்கவில்லை ஏனென்றும் புரியவில்லை
என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையா என தெரியவில்லை
வந்தவனை பிடிக்கவில்லை என்று சொல்லவும் முடியவில்லை
எனக்கு பிடித்தவன் இவனில்லை என முறையிடமுடியவில்லை

காதலனை மறக்க மறுத்த என்மனமோ – உயிரான
என் பெற்றோரை எதிர்க்க மறுக்கின்றது.
கனவுடன் காதலன் காத்திருப்பான் என்னை
கைப்பிடிக்கும் நாளினை எண்ணி காதலுடன்.

எனக்காக காத்திருக்கும் அந்த கண்கள்
எனக்காக விட்டுக்கொடுக்கும் அன்புள்ளம்
அவன் நினைவுகள் எனைவாட்டின – எனக்கு
ஏனிந்த தர்மசங்கடமான சூழ்நிலை?


உலகைவிட நீதான் அழகு என்ற அவனைவிட்டு
அவன் கண்களுக்கு அழகாக தெரிந்த நானே
அவனை பிடிக்கவில்லை என்பதா! – இல்லை
நான் சொல்ல மாட்டேன் அவன் வேண்டாமென்று.

வந்தவன் என்னை பிடிக்கவில்ல என்று
அவன் வாயால் கூறவேண்டுமென்று
ஆண்டவனை வேண்டிக்கொண்டு – அவன்
முடிவுக்காக காத்திருக்கிறேன் இப்பொழுது,

--

எழுதியவர் : Shridhar (9-Apr-12, 2:53 pm)
பார்வை : 339

மேலே