சொந்தம்

பரபரப்பான காலை, தோழமையுடன் விளையாட்டு
இன்பமான நாள் இதுவன்றோ என்றேன் நண்பனிடம்
அழகான தோட்டம் நிழல்தரும் மரங்கள்
இயற்கையும் அழகும் இரண்டற கலந்த இடம்
அதுதான் எங்கள் சொந்தவீடு ,அது கோவில்..


அன்புக்கு அன்பான அன்னை – பண்புக்கு
குறைவில்லா தந்தை இவர்களுடன் நான்
குறையாத இன்பமும் நிறைவான மனமும்
நிலையான வாழ்வும் அமைந்த அவ்வீட்டில்
நிம்மதிக்கு குறைவில்லா குருவிக்கூடாக நாங்கள்.


ஊரெங்கிலும் சப்தம் கண்ணீருடன் மக்கள்
உதவமுற்பட்டு ஓடினேன் வீதியில்
குருதியும் துன்பமும் வாட்டியது மக்களை
பந்தங்களை இழந்த குழந்தைகள் ஒருபுறம்
என்ன பாவம் செய்தனவோ முற்பிறவியில்?

வாலிப மகனை பறிகொடுத்த தாய் மறுபுறம்
வாழவா சாகவா குழப்பதில் கண்ணீருடன்
ஒருபுறம் மகனின் உடல் மறுபுறம் கணவன் உடல்
துன்பத்திலும் பெரிய துன்பத்துடன் வாழ்வில்
அணைத்து இன்பங்களையும் இழந்த அவள் தவிப்பு.


வெடித்தத குண்டு ஊரில் மட்டுமின்றி - மக்களான
எங்கள் சொந்த வாழ்கையிலும் வெடித்தது
உயிரை உடலை வாழ்வை இழந்தவர்கள் பலர்
இனி வாழ என்ன இருக்கின்றது என்ற வெறுப்பு
ஒவ்வொரு மக்களின் கண்களிலும் கண்டேன்.


சட்டென உதித்த சிந்தனை ஓடினேன் வீட்டைநோக்கி
காற்று வாங்கிய தோட்டமும் ஆடிக்களித்த முற்றமும்
பூத்துக்குலுங்கிய மலர்களும் சாம்பலாயின நெருப்பில்
பாசத்துடன் வளர்த்த பச்சைக்கிளியும் பேசவில்லை
நன்றியுடன் இருந்த நாய்க்கும் உயிரில்லை.



மாளிகைகளும் கோபுரங்களும் இப்ப்போது வீதியில்
நொறுங்கிய ஒவ்வொரு செங்கலும் எம்மக்களின் உயிர்
இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் எந்திரத்தால்
எங்கள் வாழ்வினை மீட்டுத்தர முடியுமா?
எங்கள் வாழ்க்கை கேவிக்குறி ஆனதே இறைவா!


கண்ணீருடன் சென்றேன் தாய் தந்தையை தேடி
இடிந்த வீட்டினை சுற்றி கத்தினேன் கதறினேன்
அம்மா என்றால் அரவணைக்க ஆள் இல்லை
அப்பா என்றால் அணைத்துக்கொள்ள நாதியில்லை
விபரம் தெரியாத பருவம் எனதன்றோ !


அம்மா அப்பா என்றே சுற்றிவந்தேன் அவ்விடத்தினை
சொந்தவீடேன்று ரசித்துக்கட்டிய என் தந்தை – தன்
நகைகளை செங்கலாக்க செலவிட்ட என் அன்னை
இருவரும் அவ்விடத்தில் உயிருடன் சமாதியாயினர்
நானோ அனாதையாய் நடுத்தெருவில் கண்ணீருடன்.


வாய்பேசா ஊமையாயினேன் துக்கத்தின் ஏக்கத்தில்
அழுவதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை
கண்ணீர வற்றும்வரை அழுதேன் நடுதேருவில் நின்று
இனி என்றுகிடைக்கும் பழைய வாழ்க்கை – உறவுகளை
பறித்த இயற்கை பதில்சொல்ல மறுக்கின்றது


பெற்ற தாயின் முகத்தினைக்கூட பார்க்கமுடியவில்லை
வளர்த்த தந்தையின் பாசத்தினை மறக்கமுடியவில்லை
காரணம் கேட்க்கும் வயதில் காரியம் செய்ய நேர்ந்தது
எனைமட்டும் விட்டுவைத்த இறைவனிடம் முறையிட்டேன்
எனையும் அழைத்துக்கொள் என்ற விண்ணப்பத்துடன்.


நல்லது கேட்டது தெரியா வயதில் எனக்கு
எந்த தவறு செய்ததற்காக இந்த தண்டனை? –
இலங்கையில் நான் பிறந்தது குற்றமா? - புலம்பினாலும்
கேட்பார் எவருமிலர் தங்கள் துக்கத்திலும் – அனாதை
குழந்தை அழுகின்றதே என்ற அவர்களின் பரிதாபம்
மட்டுமமே எனக்கு இப்போது சொந்தமானது....

எழுதியவர் : Shridhar (9-Apr-12, 2:49 pm)
பார்வை : 215

மேலே