Ennavan

என்னவனே,

உன் நாவால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்
எல்லாம் முக்தி அடைகின்றனவாமே
வல்லினம் மெல்லினம் இடையினம்
மூன்றும் மோதி கொள்கின்றன

உன் விரல்களால் எழுதப்படும் எழுத்துக்கள்
எல்லாம் மோட்சம் அடைகின்றனவாமே
உயிர் மெய் ஆயுதம்
மூன்றும் முட்டி கொள்கின்றன

உன்னால் தமிழுக்குள் கலவரமா என்று
நினைத்த போது தான் தெரிந்தது
என்னகுள்ளும் என்று

தமிழோடு போராட என்னால் முடியாதடா !

உன் அரை மூடி பார்வையில்
என் வெற்றியை அறிவித்து விடு


எழுதியவர் : thendral (19-Sep-10, 1:07 pm)
சேர்த்தது : thendral
பார்வை : 1685

மேலே