எனக்கான உலகம் நீ

எனக்கான உலகம் நீ - அதில்
நீ ஆதாம் நான் ஏவாள்
முத்தமிட உன் அனுமதி ஒன்றும்
தேவை இல்லை எனக்கு
மேல் உதடு நீ கீழ் உதடு நான்
கலைஞர் சொன்னது போல்
நாம் என்று உச்சரி அப்போது தெரியும்
கஷ்டத்தில் இருக்கும் போது என்னை
அரவணைக்க உனக்கு துணிவு தேவையில்லை !
ஆனால் நீ அரவணைக்க துணிந்ததேயில்லை !
நாம் விரல்கள் கோர்த்து மணிக்கணக்காய்
பேசியதை நினைத்து பார்க்கிறேன் கண்ணில்
மேகம் கரைந்து இடியுடன் மழையாய்
கொட்டுகிறது கண்ணீர் ! - நீ
வேறொருத்தியுடன் கை கோர்த்து
பேசி பழகும் அந்த நாளில்
அதைமட்டும் நினைத்து பார் உன் கண்ணிலும்
அருவி கொட்டும் !
முதியோர்இல்லமாய் அழுகிறது
என் இதயம் உன் உறவு இல்லாமல் !
கடைசியாக உன்னிடம் சொல்ல ஒன்றும் இல்லை.
நல்லாயிரு !