சித்திரையே வருக
சித்திரையே வருக
நித்திரை கொண்டுள்ள
சுத்த தமிழனை எழுப்புக
கட்டிலுக்கும் நான் கட்டும்
தொட்டிலுக்கும் சொந்தமான
மட்டும் என் வீர மார்பை
பட்டாளத்தானின்
கட்டை விரல்
தொட்டு பார்த்ததே
தட்டிகேட்க ஒரு தமையனை கொண்டுவா
என் பெண்டீர்களுக்கு ...........
ஆடை இல்லாமல் உசுரு இல்லாமல்
அம்மனமாய் கிடந்த அவர்களின்
அம் மணம் கடந்த கஷ்டத்தை
இனி இல்லாமல் செய்திட வா சித்திரையே ....
தமிழ் பாட்டு கேட்டு பல
நாளாச்சி தமிழுக்கு
நல்லதொரு கவியை வாங்கி வா
பட்டு கோட்டையாரிடமும்
கன்னதாசனிடமும்........
சித்திரையே வருக
செல்வங்களை தருக
செழிப்பை தருக