தை 1
தை பிறந்தால்
வழி பிறக்கும்
பழந்தமிழ் நாட்டின்
தொன்று தொட்ட வழக்கு
தொல்தமிழர் வாழ்வுதனில்
நம்பிக்கையிட்ட பெருக்கு
ஆறு திங்கள் வியர்வையை
நிலத்தில் நீராக பாய்ச்சி
உடலை வருத்திட்ட உழவர்
பொன்னிற நெற்மணிகளை
கலத்தில் சேகரித்து தைதிங்களன்று
அறுவடை பெருநாளன்று மகிழ்ந்திடுவார்
முதல் நெல்லை தை முதலன்று
இயற்கையில் உறைந்திடும் இறைவனுக்கு
நன்றி காணிக்கை செலுத்திடுவார்
பொங்கல் பெருவிழாயென்றே போற்றிடுவார்
தமிழர் நிலம் தாயக தமிழகம்
தமிழ் மொழி செம்மொழி நம் முகவரி
தமிழர் வரலாறு பண்பாடு போற்றியே
தமிழாய்ந்த ஆன்றோரின் கூற்றாம்
தமிழர் புத்தாண்டு தைமுதலன்று கொண்டாடி
சாதி சமயங்களை கடந்து தமிழர் - என்ற
இன உணர்வால் இகமெங்கும் இணைந்து
நிலம் இனம் மொழி காக்க எழுவர்
பொங்கல் - தமிழர் திருநாளென்று
சாற்றிடுவர் தரணி வாழ் தமிழர்