என் இனிய மழையே

இசை தெரியாத
என்னை கூட
இதழ் அசைக்க
வைக்கிறது உன் நாதம் !

உயிருக்குள் சென்று
சிலிர்க்க வைக்கிறது
உன் தீண்டல் !

என்னை எங்கோ
அழைத்துச் செல்கிறது
உன் வருகையின் போது
வரும் வாசம் !

என்னுள் எரியும்
கோபத்தீயை கூட
அணைத்து விடும்
உன் அணைப்பு !

இனி எப்போது வரபோகிறாய்
என் இனிய மழையே?

- மழைக்காதலன்

எழுதியவர் : ஆர்த்தி ராஜேந்திரன் (11-Apr-12, 12:20 am)
சேர்த்தது : மழைக்காதலன்
Tanglish : en iniya mazhaiyae
பார்வை : 191

மேலே