ஆவின் குரலும் அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
ஆவின் குரலும் அம்மா
கன்றின் குரலும் அம்மா
அணைக்கும் கரமும் அம்மா
அழுத விழியை துடைக்கும்
கரமும் அம்மா
பசித்த வயிற்றிற்கு
பால் தரும் அன்பும் அம்மா
படுத்து நீ உறங்கும் வரை
உறங்காதிருக்கும் விழியும் அம்மா
படித்து நீ பட்டம் பெற்று வர
ஓடாய் உழைப்பவளும் அம்மா
படித்து பட்டம் பெற்று நீ
வேலை கிடைத்து ஆளாய் நிற்கும் போது
அள்ளி அனைத்து உச்சி முகர்ந்து
மகிழ்பவளும் அம்மா
ஒருத்தியின் கரம் பிடித்து நீ
வாழ்வியலை தொடங்கும் போது
கண்களில் ஆனந்தக் கண்ணீர்
பெருகிட நிற்பவளும் அம்மா
முதுமை வந்து சேரும்போதும்
நோய் வந்து சூழும் போதும்
தள்ளாமையில் தடுமாறி நடந்திடும் போதும்
"ஐயா ! அருமை மகனே" என்று அழுத்திடும் போதும்
தாங்கிடும் தோளாக துணையாக
நீ நிற்க வேண்டும் அதுதான்
பெற்ற தாய்க்கு
மகனே நீ செய்யும் நன்றி ஐயா
----கவின் சாரலன்