புரியாத புத்தகமே ...

புரியாத புத்தகமே
உன் அட்டை பக்கத்தின்
கவர்ச்சியால் ஈர்க்கபட்ட
சராசரி வாசகனல்ல நான் ..

உன் உட்பக்கத்தின்
உணர்வுகளை தேடும்
தேடல் நான்..

பொது மொழியால்
எழுதப்பட்ட நூலானாலும்
புது மொழிதன்
நீ எனக்கு மட்டும் !!

துணை இல்லாமல்
வாசிக்க விரும்புகிறேன்
உன்னை !!
தேர்வு துணைவனாக
ஏற்றுக்கொள்வாயா
என்னை !!

எழுதியவர் : tamilsindhu (11-Apr-12, 12:07 pm)
சேர்த்தது : tamilsindhu
பார்வை : 223

மேலே