எது கவிதை....

மூச்சுக் காற்றில் வாடிய ரோஜா..
நெற்றியின் மீது சிதறிய கூந்தல்:
மூடிய இமை மீது
முன்வந்து நின்ற மயிர்:
மூக்கின் நுனியில் துளிர்த்த
முத்துமுத்தான வியர்வைத்துளி:
இதழோரம் நான் சுவைத்து
எஞ்சிய எச்சில் துளி:
இதற்கு மேல் சொல்வது
இங்கீதம் இல்லை.....
இவை எல்லாம் தானடி.....
இனிய கவிதை.......