கண்ணீர் எங்கே........

பேசாமல் நீ பிரிந்து போய்விட்டாய்
மனம் கூசாமல் காதலை மறந்திட்டாய்
தூக்கம் தொலைந்து
படுக்கை விறகானது
பார்வையில் அடுப்பு எரிகிறது
இவை எல்லாம் இருக்கும்
இடமாவது தெரிகிறது
ஆனால்...........
கண்ணீர் மட்டும்
களவு போனது.... Sad
எங்கே........ என்றும் தெரியவில்லை
எப்படி.....என்றும் தெரியவில்லை
எதனால்.....என்றும் தெரியவில்லை
இப்படி புலம்பி
இதயம் வலிக்குதடி...........!
இதயம் என்ற ஒன்று இருந்தால்
இன்றாவது பேசடி............

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (12-Apr-12, 6:44 pm)
Tanglish : kanneer engae
பார்வை : 405

மேலே