இலக்கியக் காதல்

இலக்கியம் காட்டும் காதல்
இன்பம் தரும் காதல்
பிரிவு கொடுக்கும் காதல்
பிரமிப்பூட்டும் காதல்
மணவாழ்க்கைக்கு முந்தையது மட்டும்
காதல் அல்ல
பிந்தையதும் கூட காதல்தான்
என்பதை சங்க இலக்கியம் சரித்திரம் ஆக்கும்

அழகு மிகு கானகம்
அங்கே அமுது போன்ற நீர் நிலை
அங்கு வழக்கமாக நீர் அருந்தும்
ஓர் அழகு மான்

சிறிது காலம் மான் நீர்நிலைக்கு வரவில்லை
காலம் சில கழிந்த பின் நீர்நிலையைத் தேடியது
நீர்நிலை மலர்ப் போர்வையால் மூடியிருந்தது
தன் பெருமுச்சினால் மலர் நீக்கி
நீர் அருந்தியது அழகு மான்

தலைவன் பிரிகிறான் தலைவி தவிக்கிறாள்
தலைவன் திரும்புகிறான்

தலைவிக்கு பிரிவினால் ஏற்பட்ட காயம் நீக்கி
இன்பம் துய்க்க வேண்டும்
என்ற வாழ்வியல் நெறியை விளக்க
மானும் மலர்ப்படுகையும் நீர்நிலையும்
உவமையாகி நிற்குதம்மா !

எழுதியவர் : porchezhian (14-Apr-12, 8:16 pm)
பார்வை : 294

மேலே