உன்னுள்ளான எதிரி...!
பன்னெடுங் காலந்தொட்டு
படைஎடு காலர் மேல்
அலர்மீதுய்த்த இதழ்
பிரித்துற்றாய்ந்து
அகழ்வு கொள்
உன் அகிதனைத்
தேடி.......!
விசையுறு விழைவுறு
விரயமில்லாங்கே
விரவி நில்.....
அடிபரப்பி
இடைப்புகுந்து உன்னடி
மறைத்துவைத்த
மறை யாது
அறிந்து விடு......
உன் காலனோ அகிதனோ
உன்னுள்ளே என்று நீ
உணர்படும் ஒரு நொடி
நோக்கியே உன்
உழல்தலும் உறைதலும்
கொண்டு
சுழலுமிவ்வுலகு........