boomerang

அந்த மருத்துவமனை அந்த காலை வேளையில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.அந்த சூழ்நிலைக்கு முற்றிலும் மாறாக ஒருவர் விரட்டிக்கொண்டிருந்தார்."யோவ்,என்னய்யா பண்ற,நாலு மாடில இருக்குற குப்பய எடுக்குறது மட்டும் தான உன் வேலை அதையே செய்ய வலிக்குதா உனக்கு?"
அவரால் விரட்டப்பட்டவருடைய தோற்றத்திற்கும்,அவசரப்பிரிவு நோயாளியின் தோற்றத்திற்கும் அதிக வேறுபாடு எதுவுமில்லை.வளைந்த காலும்,பஞ்சடைத்த கண்ணும்"இன்னும் எத்தனை நாளோ"என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது.
"என்னய்யா தயங்குற சம்பளம் வாங்குரெல்ல அதுக்கு வேலை செஞ்சா என்ன?அப்புறம் இந்த வேலைய செய்ய முதலமைச்சரையa kooppida முடியும்?"என்றார்.அவரோ நன்றாக உடையணிந்து ஆஜானுபாகுவாக ,இந்த maruththuvamanaye yennudayathu என்று சொல்லும் தோற்றம்.அவரின்வேலையும் பராமரிப்பு பிரிவில் தான்.
அந்த வயதானவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தார்.நடக்க முடியாமல் குப்பைகளை அள்ளி கீழே கொண்டு போனார்.
அன்று மாலை அந்த டிப்டாப் மனிதரின் வீட்டில் அவருக்கும்,அவர் மனைவிக்கும் sariyana வாக்குவாதம்.இருவரும் பணிபுரிவதால் வேலைகளை பங்கு போடவேண்டிய நிர்பந்தம்.
அலுவலக வேலைகளை முடித்து thaamathamaga வந்த மனைவி அவரை நோக்கி வார்த்தைகளை வீசிக்கொண்டிருந்தால்.
"yeanga வீட்டுல இருக்குற நாலு ரூமை மட்டும் கூட்ற்றதுகென்ன?அதுவும் நான் வந்துதான் செய்யணுமா?குப்பய கூட்டி அள்ளுறதுக்கு மகாராஜாவுக்கு கஷ்டமா இருக்கு"என்று ஆரம்பித்ததை முடிக்காமல் தொடர்ந்து கொண்டேயிருந்தாள்.
அப்போதுதான் அவருக்கு எதுவோ தலையில் அடித்தது போல இருந்தது.தானும் காலையில் விரட்டிய பஞ்சடைத்த கண்ணுடனும்,வளைந்த கால்களுடனும் கஷ்டப்பட்ட கிழவனில் oruvanagipponaan .

எழுதியவர் : ranibala (15-Apr-12, 12:47 am)
பார்வை : 381

மேலே