ஒரு கல்லறைதான் காதலின் குறியீடா?

இந்த உலகில் உன்னை
நிந்திக்கும் ஒரே ஒருவன்
நானாகத்தான் இருக்கும்.
அதனால் என்னை நிந்திப்போர்
பலராக இருந்தாலும் பரவாயில்லை.
அழகின் அவதாரமே!
உலக அதிசயங்களில் ஒன்றான நீ
இந்தியாவின் அதிஷ்டம்தான்.
வெளியே நீ
வெள்ளைப்பளிங்கு மண்டபம்
உள்ளே ஒளிந்து கிடப்பதோ
உன்னைக் உருவாக்கியவர்கள்
சிந்திய இரத்தக்கரைகள்!
நீ ஒரு கல்லறை!
பதிமூன்று குழந்தைகள் பெற்ற
பாசமுள்ள மனைவிக்கு
நேசமுள்ள மாமன்னன்
கட்டிவைத்த கல்லறை.
வாழ்வோர் இதயங்களில்
வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு உயிருள்ள கல்லறை!
இல்லறவாழ்வின்
கலாச்சார சின்னமான நீ
காதலர் சின்னமானது எப்படி?
ஒரு கல்லறைதான்
காதலின் குறியீடா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஒன்றும் வராது...
தருமராசு த பெ முனுசாமி
31-Mar-2025

மத்திய சிறை...
சு சிவசங்கரி
31-Mar-2025
