காதலன் ஆசை
உன் வில்லம்பு விழியில்
என் விலாஎலும்பை
முறிக்க ஆசை!
உன் புருவ வாளால்
என் உடலை
கூறுபோட ஆசை!
உன் வகுடெடுத்த
தலைபின்னலில்
நான் வழி தெரியாமல்
விழிக்க ஆசை!
உன் உதட்டின் பள்ளங்களில்
நான் விழுந்து
தற்கொலை செய்ய ஆசை!
உன் காதோர கம்மலில்
என்னை அடகு
வைக்க ஆசை!
உன் கழுத்தில் தொங்கும்
பாசிமணியில் என்னை
தூக்கிலிட ஆசை!
உன் புடவையின் மடிப்பில்
என் மூச்சை
நிறுத்த ஆசை!
உன் இடையசைவில்
என் எதிர் காலத்தை
புதைக்க ஆசை!
உன் கள்ள சிரிப்பில்
என் உயிரை
கிள்ளி எறிய ஆசை!
உன் சிறிய சிணுங்களில்
என் உடலுறுப்புகள்
செயலழிக்க ஆசை!
உன்னை காதலித்து காதலித்து
பித்தனாக ஆசை!
காதலியின் மடியில்
மடிய ஆசை!
காதலியின் வயிற்றில்
வளர ஆசை!
இது ஓர்
காதல் ஆசை!
ஓர் காதலன் ஆசை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
