தாகம் தணியட்டும்
பசியின்றி மனிதர் நாளும்
படுக்கைக்கு செல்ல வேண்டும்
அனைவருக்கும் கல்வி
உயர் படிப்புவரை இலவசமாக வேண்டும்
வேற்றுமை கலைந்து
மனிதரென்ற ஒற்றுமை வேண்டும்
நீதி அனைவருக்கும் ஒன்றென
உலகில் நின்றிடல் வேண்டும்
ஊழல் ஒழிந்து எங்கும்
நல்லாட்சி மலர வேண்டும்
தீய எண்ணங்கள் அகன்று
நன்மையால் உலகம் நிறைய வேண்டும்
உண்மை உழைப்பு நம்பிக்கையில்
நாளும் உலகம் வளர்ந்திட வேண்டும்
சுற்றுச்சுழல் மாசுயின்றி
நோயற்ற வாழ்வு நலமாக வேண்டும்
இயற்கை சீற்றங்கள் அகன்று
நிம்மதி வாழ்வு எங்கும் வேண்டும்
இயற்கையும் நமது உறவென்று
இன்பமாய் பேணி காத்திடல் வேண்டும்