திங்களும் எழுதினாள்
தென்றலும் எழுதினாள்
ஒரு கவிதை தேன்
மலரிதழினில்
திங்களும் எழுதினாள்
ஒரு தீஞ்சுவை கவிதை
நெஞ்சினில்
தென்றலும் திங்களும்
நிகர்த்த மதுரைத் தமிழ்
மன்றம் பொலிந்து வர
இளவேனில் எழுதியது
ஓர் இன் கவிதை
தமிழர்தம் நல்வாழ்வினில்
---கவின் சாரலன்