மன்னிப்பு

இதய காயங்களால்
கலங்கி நிற்போரே
மன புண்களால்
புழுங்கி புதைவோரே
பழிவாங்கி குணமாக
துடியாய் துடிப்போரே
பழிவாங்கும் எண்ணம் மீண்டும்
உங்களை காயப்படுத்தி சிரிக்கும்
குற்ற இருளுக்குள் தள்ளும்
குணமாக ஒருவழிதான் உண்டு - அது
இயேசு வாழ்ந்து காட்டிய மன்னிப்பு
நம் வாழ்வில் மலர்ந்தால்
மன காயங்கள் மறைய
இதயம் இதம் பெரும்
பிறர் குற்றங்களை மன்னிப்பதில்
நமது உடலும் மனமும் குணம்பெரும்
என்ற உண்மைதனை அறிவோம்
அதன் வழி நடந்தே மகிழ்வோம்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (17-Apr-12, 4:07 am)
சேர்த்தது : athainiscap
பார்வை : 290

மேலே