சொத்தைப் பயலும், படு சொத்தைப் பெண்ணும்!!!

முகங்கள் இரண்டும் பூக்கள் பூக்க;
புருவம் நான்கும் பூரிப்படைய;
இமைகள் நான்கும் நாணம் கொள்ள;
கண்கள் நான்கும் காதல் சொல்ல;
இதழ்கள் நான்கும் ஏக்கம் கொள்ள;
கைகள் நான்கும் கட்டித் தழுவ;
கால்கள் நான்கும் நாட்டியமாட;
மௌனம் சேர்ந்து மொழியாய் மாறி இரு இதயம் சேர்ந்து "இன்பம்" கொண்டால்;
இதற்கு பெயர் தெய்வீக காதலாம்!!!

சொத்தைப் பயலே!!! சொத்தைப் பயலே!!!
சொத்தைக் கண்ட சொத்தைப் பயலே!!!
சொத்திற்காக ஆசைப்பட்டு சொத்தை இழந்த சொத்தைப் பயலே!!!
சொத்தைப் பெண்ணே!!! சொத்தைப் பெண்ணே!!!
சொத்தைக் கண்ட சொத்தைப் பெண்ணே!!!
சொத்திற்காக ஆசைப்பட்டு சொத்தை இழந்த சொத்தைப் பெண்ணே!!!

தாய், தந்தையை பறிக்கொடுத்து எந்த சொத்தை கண்டீரோ!!!
தாய், தந்தையை கலங்கவைத்து எந்த சுகத்தை பெற்றீரோ!!!
மோகம் தீர்ந்து மோட்சம் கொண்டு தாய், தந்தையை நோக்கி உறவாட வந்தீரோ!!!

சொத்தைப் பயலே!!! சொத்தைப் பயலே!!!
சொத்தைக் கண்ட சொத்தைப் பயலே!!!
சொத்தைப் பெண்ணே!!! சொத்தைப் பெண்ணே!!!
சொத்தைக் கண்ட சொத்தைப் பெண்ணே!!!
உங்கள் காதல் கதையைக் கொஞ்சம் சொல்வீரோ...

முகங்கள் இரண்டும் முட்டி மோதி;
புருவம் நான்கும் கருவம் கொண்டு;
இமைகள் நான்கும் சிலுவை சுமந்து;
கண்கள் நான்கும் கண்ணீர் சிந்தி;
இதழ்கள் நான்கும் சாபம் விட்டு;
கைகள் நான்கும் கலவரம் கொண்டு;
கால்கள் நான்கும் கழுதையாய் மாறி;
மௌனம் சேர்ந்து பழிகள் போட இரு இதயம் பிரிந்து "துன்பம்" கொண்டு "தெய்வீக" காதல்; "களவு" காதலானது!!!

சொத்தைப் பயலே!!! சொத்தைப் பயலே!!!
சொத்தைக் கண்ட சொத்தைப் பயலே!!!
சொத்தைப் பெண்ணே!!! சொத்தைப் பெண்ணே!!!
சொத்தைக் கண்ட சொத்தைப் பெண்ணே!!!
இன்றைய காதல் நிலையைப் பாருங்களேன்...
நீங்கள் மனம் தெளிந்து மனிதனாக வாழுங்களேன்...

எழுதியவர் : கார்த்திக்... (17-Apr-12, 5:18 am)
பார்வை : 230

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே