வருகிறாள் என் காதலி!
காலமே விலகிச்செல் என் காதலி வருகிறாள்
என்னை காணவே!
கார்மேகம் போல் தென்றல் அசைந்து வருவதுபோல் வருகிறாள்.
இசை பாடும் குயில்களும் அவளது குரலை கேட்டால் சாந்தம் கொள்ளும்
என் உயிரில் கலந்த உறவே!
என்னை நாடி வருகிறது.
உங்களது பொன்னான கரங்களால் இசை தாளமிடுங்கள் வசந்தங்களே!
பாசப்பறவை போல் வருகிறாள் வழிவிடுங்கள் வண்ண மலர்களே!