பழைய சோறு..

கழனியை நிறைத்த சோறு..
களைத்தவருக்கு பிடித்த சோறு..
உழைத்தவர் எல்லாம் உண்ணும் சோறு..
உடலை உறுதி பண்ணும் சோறு..

முதல்நாள் மதியம் வடிச்ச சோறு..
முழு ராத்திரியும் நனைஞ்ச சோறு..
பச்சதண்ணியில மிதந்த சோறு..
அஞ்சு வெரலுல பிழிஞ்ச சோறு..

ஊறுகாயோடு சேரும்போது...
நூருகை சோறு உண்ணலாம்..
கருவடோடு கலக்கும்போது..
கடவாயில் நீர் ஒழுகலாம்..

ஒருகை எடுத்து திங்கும்போது..
வாயெல்லாம் இனிக்குதே..
வயிறெல்லாம் குளிருதே..
நோயெல்லாம் பறக்குதே..

சுடு சோறு கனவான வீட்டுல..
பழைய சோறு உணவாகி போனதே..

எழுதியவர் : (25-Apr-12, 4:44 pm)
பார்வை : 1145

மேலே