என்னடி செய்வான்?
நெற்றியில் பொடியாக முளைத்து
அருவியாக கொட்டும் அளவிற்கு
வியர்வை வெளியேறும்
இந்த கோடை வெயில் காலத்திலும்
எப்படி மழை பெய்கிறது?
என்று நினைத்தேன்?
ஆனால் உன் அழகிய கருணை முகத்தை
பார்த்தால் வருண பகவான்
இறங்கி வராமல் என்னடி செய்வான்?