கருவறையின் தவிப்பு

குழந்தாய்,
உன் அம்மாவின் கருவறை
பேசுகிறேன்.....
ஒரு ஒரு திங்களும்
என் கருவறை சுவர்களை
ஹார்மோன்கள் கொண்டு
பூசினேன்,
உனக்கும் எனக்கும் தொப்புள் கொடி
பந்தம் உருவாக!!
சிகப்பு கம்பள தொட்டில்
அமைத்தேன்,
நீ வளமாக என்னுள் வளர!!
இந்த முறையேனும்
இந்த அன்பு அழைப்பை ஏற்று,
என்னுள் நின்று விடு
என் குழந்தாய்.....என் குழந்தாய்!!!!!!!

எழுதியவர் : சங்கீதா குணா (27-Apr-12, 2:06 am)
பார்வை : 280

மேலே