காதல் போர் ...!!!
![](https://eluthu.com/images/loading.gif)
புத்தாடைகள் அணிந்து
கையில் மத்தாப்புடன்
பச்சை நிற அணுகுண்டில்
நீ நெருப்பை வைத்துவிட்டு
காத்திருந்த பொழுது
உன் வீடருகே
வந்து கொண்டிருந்த என்னை
வராதீங்க வராதீங்க
என கூறி தடுத்து நிறுத்திய
அந்த நொடியில் தான்
முதல் குண்டை போட்டு
நமக்கான காதல் போரை
துவக்கி வைத்தாய்.........!!!