நீதானே அன்பே

தாயாக வந்ததும்
தந்தையென வந்ததும்
நீதானே அன்பே - என்

சேயாகப் பிறந்ததும்
செல்வமெனப் பெற்றதும்
நீதானே அன்பே - எனது

நோயாக வந்ததும்
நோயின் மருந்தாவதும்
நீதானே அன்பே - இந்த

மாயலோகத்தில்
நானாக இருப்பதுவும்
நீதானே அன்பே!

எழுதியவர் : சுதந்திரா (22-Sep-10, 5:36 pm)
சேர்த்தது : சுதந்திரா
Tanglish : neethanae annpae
பார்வை : 486

மேலே