வீடு முழுவதும்
கால் முழுவதும் சேறு
முகம் முழுவதும் சுருக்கம்
கை முழுவதும் பழைய சாதம்.....
செருப்பிலாத கால்கள்,
ஒட்டி ஒடுங்கிய கண்கள்,
அரசின் இலவச திட்டத்தால்,
வீடு முழுவதும் பொருட்கள்
நிறைந்திருந்த போதும்,
மனம் முழுவதும் வெறுமை
நிறைந்த நிலையிலும்,
படுத்தவுடன் தூங்கிவிடும்
உழைப்பாளி வர்க்கத்தை போற்றுவோம்
உழைப்பை வாழ்த்துவோம்.
நாமும் உழைக்க கற்று கொள்வோம்..