கவிதைகள் 1 (சாதிக்கப் பிறந்தவர்கள் )

சாதனை

வெகு தூரம் சென்றேன்
எதோ ஒன்றைத் தேடி
தேடுதல் ஒரு
சுகம்தானே ...
மீண்டும் தேடினேன்
தோல்விகளின் வலியை
மறந்துவிட்டு..
மீண்டும் தேடினேன்
சாதிக்க....

அனுபவம்

கீழே விழுந்ததும்
அழும் குழந்தை,
தானே எழுந்து
சிரிக்கையில் தான்
தெரிந்தது
தோல்விகளும்
வெற்றிப் படிகளென...!!

வரலாறு

தலைமகன் இறந்ததும்
மனைவி வீதி வரை
உறவுகள் வீடு வரை
பிள்ளைகள் காடு வரை
ஆனால்..
அவரது வீடு, கார் மட்டும்
பிள்ளைகளிடமும் ....
அவரது பண்புள்ள குணம் மட்டும்
மனைவியிடமும்...
அவரது உடலை மட்டும்
பூமியிடமும்...
ஆனால் ...
அவரது பெயர் மட்டும்
கல்லறையில்
பத்திரமாக....


சேவை

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து
சமுதாயத்தில் அக்கறைகாட்டி
சேவைபுரிய வாழ்நாட்களை
அமைத்துக்கொள்ளும்
மனிதர்கள்..
உலகம் போற்ற வாழ்வை
அர்ப்பணித்து இறந்தும்
இரவா புகழ் பெற்றவர்கள் ..


வள்ளல்

வாடியபயிரெல்லாம் வாடியபோது
வாடினேன் என்ற வள்ளலாரைப் போல
வாடிய மனிதர்களைக் கண்ட
போதெல்லாம் ..
மழையின் கொடைபோல
நாமும்
வாடுவோம் ..!!


பிரம்மாண்டம்


வலை போட்டுத் தேடினாலும்
வளையோசையில் தேடினாலும்
கிடைக்காத
அட்சய பாத்திரம்
பிரம்மாண்டம் ...

தேடல்கள்


குளத்து மீனை உண்ண
கொக்கு காலைத் தூக்கி நிக்க ,
இன்று என்னைப் பிடிக்காதே என
குளத்து மீன் கடவுளை வேண்ட ...
கிணத்து மீனை உண்ண
தவளை முதுகைத் தூக்கி நிக்க ,
இன்று என்னைப் பிடிக்கக்காதே என
கிணத்து மீன் கடவுளிடம் வேண்ட...
கடல் மீன்களெல்லாம்
தன் இனத்தைக் காத்து நிக்க
அதுவும் கடவுளை வேண்ட
கடவுளைப் பொய்யாக்கியது
இறுதியில் ...
திறமை கொண்ட வாழ்க்கை
என்றுமே நிலைத்திடும்
என்று..
கடவுள் உணர்த்த ..
புரிந்து கொண்டது அந்த
உயிர்கள்..!!


வசந்த நினைவுகள்


பள்ளிப் பருவம் முதல்
பார்த்த நாட்களை
விழிகளால் எண்ணி எண்ணி
தேடி அலைந்து அலைந்து
வருடங்கள் கடந்த பின்பு
தேடுவதை தேடிக் கொண்டிருக்கையில்
நீ என் முன் வந்ததும்
ஒரு நிமிடம் சிலையானேன் ..
அந்த நாட்களை நினைத்து நினைத்து ..
இனி வருமா வசந்தத்தின்
நாட்கள் தொலையாமல்.. !!

சிக்கல்

அனைத்து சிக்கலும்
முடிவு பெற்றது .
ஆனால் ..
நான் எதிர்கொண்ட
சோதனையில் ..
சிக்கல் இல்லை ...


துன்பப் பயணம்


வெகு காலம் கடந்தது
துன்பங்களை மறக்க
அது உருவானது
கற்சிலையாக..
மீண்டும் அதனை
மறக்க..
மீண்டும் துன்பப்பட்டாக
வேண்டும்...
சாதனை செய்ய ..


மனித வாழ்க்கை


விதைப்பு தொடங்கி
அறுவடை வரை,
பிறப்பு முதல்
இறப்பு வரை
எது நடந்தாலும்
நிர்ணயிப்பது இதன்
கணிப்பு.
ஐந்து அடிப்படைப் பொருள்
அடக்கியது.
திதி, வாரம்,நட்சத்திரம்,யோகம்,
கரணம் இவைதான்..
ஆனால் ..
மனித வாழ்க்கையைத்
தீர்மானிக்கிற கணிப்பு ,
சுனாமி ,பூகம்பம் என்ற
பஞ்சாங்கம் தான் ..!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 2:29 pm)
பார்வை : 319

மேலே