கவிதைகள் 6 ( எதார்த்தங்கள் )

பொம்மையின் நேசம்

உலகம சுற்றிய பின் ஒரு
அங்காடியில் பார்த்த நான்
அங்கிருந்த பொம்மை என்னை
வியப்பூட்டியது .
அது என்னிடம் கேட்கிறது.
நான் இருக்கும் இடத்திலிருந்து
எல்லோரையும் மகிழ்விக்கிறேன் .
உன்னால் சாதிக்க
முடியவில்லையே
என்றது.
அப்பொழுதுதான் புரிந்தது
நான் இருக்கும் இடத்திலேயே
அனைத்தையும் சாதிக்கலாமென்று...

முத்தம்

மலைகள் விண்ணைத்தொட
முத்தமிடுகிறது...
அலைகள் ஒன்றன் மேல்
முத்தமிடுகிறது...
பூமியோடு சந்திர,சூரிய
முத்தமிடுகிறது...
இத்தனையும் முத்தமழை
பொழிகின்றது...
இங்கு நீயோ ...
தன்னந்த்தனியே இலையுதிர்கால
மொட்டைமரமாக...


தனிமை

தனிமை என்னை வாட்டுகையில்
உன் நினைவுகளைத் தேடி தேடி
உள் மனது வாட்டுகின்றது.
நிமிடங்கள் செல்கிறதே ..
காதல் உணர்வு மிகுதியால்
பாதையை தவற விட்டேன் ..
பாதைகள் எல்லாம் என் காதலின்
நினைவுப் புல்வெளிகள் மீது
பனி நீராக கரைந்து
செல்கின்றன....

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 3:29 pm)
பார்வை : 238

மேலே