கவிதைகள் 5 (எல்லாம் என் கையில் )

பயம்

கீழே விழுந்து விடுமோ
என்பதைவிட
வானத்தில் தோன்றும்
மின்மினிப் பூசிகள் என்
மேலே விழுந்து விடுமோ
என்று வெளியில்;
காற்றுக்காக
கட்டிலில் படுப்பதில்லை .


பேய் வீடு

யாருமில்லாத அந்த
வீட்டில் குடியிருந்து
அலையும் வவ்வால்களை
பேய்கள் என்று
நம்புகிறார்கள்
இரவிலே !


நேசம்

மழை மண்ணை எதிர்பார்த்து
மண் மரத்தைக நிதம் காத்து
மரம் காய்தனை வளர்த்து
காய் தன்னை கனியாக்கி
தாய்மை என்ற
பெருமை சேர்க்கிறது.


என் கையில்

வேகமாகத் துடிக்கும் என் இதயம்
நின்றால் உன் வாழ்க்கை கேள்விக்குறி?
வேகமாகப் பாயும் ரத்தம் உறைந்தால் கேள்விக்குறி?
உன்னுள் இருக்கும் மனத்துள்
நான் பேசுவதால் நேரம் வீணாகின்றது.
உன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்.
ஏன்? என்றது மனம்.
உன்னுடன் பேசுவதால் நேரம் வீணாகிறது .
உன் வாழ்க்கை உன் கையில் அல்ல..
என் கையில்...

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 3:11 pm)
பார்வை : 410

மேலே