உப்புவின் நேசம்

என்னை நேர்மையா நேசிங்க
உண்மையா நேசிங்க
சத்தியமா நேசிங்க
நிஜம்மா நேசிங்க
உணர்வோடு நேசிங்க
அளவுக்குமீறி நேசிக்காதிங்க
நான் இல்லாமல் உங்களால
வாழமுடியாது ..
என்னை குப்பையில கூட
போடாதிங்க.
ஆனா..நான் ஒன்னே ஒன்னு சொல்றேன்
என்னைய குளிப்பாட்டதிங்க ..!!
நான் அழுதுடுவேன் ..
என் பிறப்பும் இறப்பும்
கடல்தான்
என் வாழ்க்கையும்
கடல் நீரில்தான் ..

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 6:46 pm)
பார்வை : 208

மேலே